தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில்  10.10.2019 வியாழக்;;கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் க. சக்திவேல், தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் ந. ராஐவேல், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே.கவிதா, முனைவர் ப. தாமரைச்செல்வன், முனைவர் கி. குணசேகரன், புலமுதன்மையர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் ஆல்பா தனிப் பயிற்சிக் கல்லூரி முதல்வர் (ப.நி) முனைவர் ரெ. வாசு அவர்கள் கலந்து கொண்டு “இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஓளவையார், நமக்கல் கவிஞர், அப்துல் கலாம், விவேகானந்தார், வள்ளுவர், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோரின் உன்னதாமானக் கருத்துக்களைக் கொண்டு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை இலக்கியத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். தமிழ்மொழியில் எவ்வாறு எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை தெளிவாக எடுத்தரைத்தார். நடப்பு நிகழ்வுகள், ஆசிரியர் மாணவர்களின் உறவு நிலைகளை பாடம் பிடித்துக் காட்டும் வகையில் சொற்பொழிவாற்றினார். மேலும் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் நகைச்சுவை, பாடல்களோடும் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக திருமதி.ச.சசிகலா உதவிப்பேராசியர் அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எமது துறைப்பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் செய்தனர்.