20.09.2013 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.அனந்தநாயகி அவர்கள் சங்க கால விந்தைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். சங்க காலத்தில் நம் தமிழர்கள் எவ்வாறு வீரமுடன் திகழ்ந்தனர் என்பதை பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். அவ்வகையில் பெண்ணின் பெறுமைகளையும் வீரவுணர்வுகளையும் சங்க காலச் சான்றுகளுடன் கூறினார். புலியை முறத்தால் விரட்டிய பெண், போர்க்களம் சென்ற பெண்கள், மதுரையை எரித்த கண்ணகியின் வீரத்திறம், மேலும் ஒரே மகனை போருக்கு அனுப்பிய செய்தியையும், தன் மகன் புறமுதுகு காட்டி இறந்தான் என அறிந்த தாய் அவ்வாறு என் மகன் இறந்திருந்தால் அவனுக்கு பால் புகட்டிய மார்பை அறுத்தெரிவேன் என வீரத்தை வெளிப்படுத்திய செய்தியையும் இயற்கை வருணனைகள், மீவியற்கைச் செய்திகள் போன்றவற்றைச் சான்றுகளுடன் இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான விழிப்புணர்வுக் கருத்துக்களைக் கூறினார்.