தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் 29.01.2020 புதன் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் க. சக்திவேல், தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் ந. ராஐவேல், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே.கவிதா, முனைவர் ப. தாமரைச்செல்வன், முனைவர் கி. குணசேகரன், புலமுதன்மையர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரி தமிழ் இணையக்கழகத்தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு “தகவல் தொழில் நுட்பத்தில் தழிழ்வழிக்கல்வி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் இணையத்தை மாணவர்கள் பயன்படுத்தும் விதம் தமிழ்வழிக்கல்வியில் கணினியால் பெறப்படும் வேலைவாய்ப்புகள், பல்வேறுவகையான இணையத்தல பயன்பாடுகளை மாணவர்களுக்கு உணர்த்தினார். இக்கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் இணையவழி கல்வியின் அவசியத்தையும் இணையத்தில் தமிழ் பெற்றுயிருக்கும் இன்றிமையாமைப்பற்றி அறிந்துக்கொண்டனர். இக்கருத்தரங்கமானது பல்வேறு மாணவர்கள் பயன்படும் வகையில் அமைந்திருந்தது.

இறுதியாக  செல்வி.சீ.ரேவதி உதவிப்பேரரிசியர் அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எமது துறைப்பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் செய்தனர்.