இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம்.

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில்  31.07.2019 புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இலக்கிய மன்ற தொடக்கவிழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. சக்திவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் ந. ராஜவேல், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே.கவிதா, முனைவர் ப. தாமரைச்செல்வன், முனைவர் கி. குணசேகரன் மறு;றும் புலமுதன்மையர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை கணேசர் கலை அறிவியல் கல்லூரி முனைவர் பொன்.கதிரேசன், உதவிப்;பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு ‘இலக்கியக்கல்வியே சிறந்த செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கில் சங்க இலக்கியங்கள் குறித்தம் மற்றும் அன்னை தெரசா அம்மையார் போன்று சமூகசேவையை மாணவர்கள் செய்ய வேண்டும். அப்துல் கலாம் சொன்னது போல அனைவரும் கனவு காணும் போது தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார். பொருட்செல்வத்தை விட தனிமனித வாழ்வியலை மேம்படுத்தவது செவிச்செல்வம் என்பதனை சங்கால மற்றும் தற்கால இலக்கியங்களோடும் தான் கண்ட அனுபவ அறிவையும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் படி உரையாற்றினார்.

இறுதியாக உதவிப்பேராசிரியர் திரு கோ.பிரபு அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எமது துறைப்பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் செய்தனர்.